இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கரிமப் (organic) பொருட்களுக்கான பரஸ்பர அங்கீகார ஏற்பாட்டில் (Mutual Recognition Arrangement – MRA) கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் கரிம வர்த்தகத்திற்கான தேவைகளை எளிதாக்கும் என்றும், சான்றளிக்கப்பட்ட கரிமப் பொருட்கள் இரு நாடுகளுக்கும் இடையில் தடையின்றி செல்வதை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இரு நாடுகளிலும் உள்ள விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒருவருக்கொருவர் கரிமச் சான்றிதழ் தரநிலைகளை அங்கீகரிப்பதன் மூலம், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கரிம உணவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளில் அதிக நம்பிக்கையையும் செயல்திறனையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் முக்கிய வர்த்தக உறவான ஆஸ்திரேலியா கடுமையான கரிமத் தரங்களுக்கு பெயர் பெற்றது.

MRA கரிம வேளாண்மையில் புதுமைகளை ஊக்குவிக்கும் மற்றும் விவசாயத் துறையில் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதேவேளையில் இருநாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் உலகளாவிய கரிம உணவு வணிகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.