பாட்னா: பீகாரில் நடைபெறம் மகளிர் மாநாட்டில் பங்கேற்க வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா வத்ரா இன்று பீகார் மாநிலம் செல்கிறார்.

பீகாரில்  வாக்காளர் தீவிர சீர்திருத்தம் காரணமாக சுமார் 65லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அங்கு நடைபெறும் மகளிர் மாநாட்டில் பங்கேற்க பிரியங்கா காந்தி! இன்று மதியம் பிகார் செல்கிறார் .

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பீகார் காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது கான், பிரியங்கா காந்தி  இன்று  நண்பகல் பாட்னாவில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பிறகு 3 மணியளவில் மோதிஹரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்தில் பிரியங்காவின் இரண்டாவது முறையாக பீகார் மாநிலம் செல்கிறார். அவர்,  முன்னதாக, ஆகஸ்ட் மாதம் வாக்காளர் ராகுல்காந்தியின்  அதிகார யாத்திரையில் கலந்துகொண்டார்.

பீகாரில் ஒட்டோ சோரி நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி, மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் அவரது சகோதரருமான ராகுல் காந்தி பதினைந்து நாள்களில் 25 மாவட்டங்களில் 1,300 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தைக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.