சீனா, புதிய எஃகு உற்பத்தியைத் தடை செய்து மொத்த உற்பத்தியை குறைக்க உள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, சந்தையில் விநியோகம் மற்றும் தேவையை சமநிலைப்படுத்துவதற்கான முயற்சியாகும்.
தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் பிற நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 2025-2026க்கான திட்டத்தில் உயர்தர எஃகு உற்பத்தியை அதிகரித்தல், கட்டுமானம் மற்றும் போக்குவரத்தில் எஃகின் பயன்பாட்டை ஊக்குவித்தல்.

காலாவதியான, திறமையற்ற உற்பத்தி நிலையங்களை மூடுதல் மற்றும் மேம்பட்ட நிறுவனங்களை ஆதரித்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
ஆகஸ்ட் 2025 இல் எஃகு உற்பத்தி 77.37 மில்லியன் டன்களுக்கு குறைந்தது இது 2024ஐ விட 0.7% குறைவு. கடந்த மூன்று மாதங்களாக தொடர் சரிவில் இருப்பதாகவும் மாதந்தோறும் 2.9% சதவீதம் உற்பத்தி குறைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் எஃகு துறையை கட்டுப்படுத்தி, தரமான உற்பத்தியை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் நன்மையை பெறவும், பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யவும் சீனா முயற்சி செய்வதாக ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.