சென்னை: நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, பொதுமகக்ள் ஜிஎஸ்டி வரி தொடர்பான புகார்கள் அளிக்க உதவி எண்கள்களை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.
ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், NCH செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை சுமார் 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் இன்று குறைந்துள்ளத.
இதனிடையே ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்படி பிரதமர் மோடி, மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த வரி குறைப்பு மூலம் பொதுமக்கள் பயனடைவார்கள் என பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், NCH செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி குறித்த நுகர்வோர்களின் புகார்களை 1800-11-4000 என்ற எண்ணில் அளிக்கலாம். அதேபோல, https://consumerhelpline.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.