சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் 3ம் கட்ட பிரசார பயணப்பட்டியல் தேமுதிக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, அவர், அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில்  பிரசாரத்தை தொடங்கி 13ம் தேதி  கோவை வடக்கு தொகுதி வரை  பிரசாரம் மேற்கொள்கிறார்.

2026ம் ஆண்டு  ஏப்ரல் அல்லது மே மாதம்  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசியல்  கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கன திமுக, அதிமுக, பாமக, தவெக, நாம் தமிழர் என அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பிரசார பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில்,   தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே ஆகஸ்டு 3ந்தேதி முதல் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கியதுடன், 2வது சுற்றுகட்ட சுற்றுபணத்தை முடித்துள்ளார். இதையடுத்து,  பிரேமலதா மேற்கொள்ளும் 3ம் கட்ட பிரசார பயணப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,  அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில்  பிரசாரத்தை தொடங்கும் பிரேமதா,   13ம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார்.  அக்டோபர்  5ம் தேதி கிருஷ்ணகிரி, 6ம் தேதி தருமபுரி, 7ம் தேதி ஈரோடு நகரம், ஈரோடு வடக்கில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அக்டோபர் 8ம் தேதி ஈரோடு தெற்கு, 9ம் தேதி திருப்பூர் நகரம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு பகுதிகளிலும், 10ம் தேதி திருப்பூர் வடக்கு, 11ம் தேதி கோவை நகர், கோவை தெற்கு, 12ம் தேதி நீலகிரி, கோவை வடக்கில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

’உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த்!