டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் தனது தலையீட்டின் பேரிலேயே இந்தியா பாகிஸ்தான்மீதான தாக்குதலை நிறுத்தியது அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறி வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தில் கரியை பூசிய பாகிஸ்தான்… உள்ளது பாகிஸ்தான். டிரம்பின் அண்டபுழுகு அம்பலமாகி உள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்க்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. இதை பாகிஸ்தான் துணைபிரதமர் இஷாக் டார் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து பஹல்காம் பகுதியில் இந்தியர்களை கொடூரமாக சுட்டுக்கொன்ற செயலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்ததுடன் பாகிஸ்தான் விமான நிலையம் உள்பட சில பகுதிகளை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி இந்திய ராணுவ அதிகாரிகளிடம் பேசியதின் பேரில் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்து, தனது தலையீட்டால்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என கூறி வந்தார். பல முறை அவர் இந்த கருத்தையே கூறி வந்த நிலையில், இதற்கு இந்தியஅரசு மறுப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா ஒருபோதும் மூன்றாம் நபர் தலையீட்டை ஏற்காது என உறுதிப்படுத்த தெரிவித்து வருகிறது.
மேலும், நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடியும், இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணியாது. அந்த மிரட்டல் இனி எடுபடாது. இந்தியா ஒருபோதும் பயப்படாது. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தில் எந்த நாட்டு தலைவரும் தலையிடவில்லை. மே 9-ம் தேதி அமெரிக்க துணை அதிபர் மைக் வின்ஸ் தொலைபேசியில் பேசினார். அப்போது, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தேன் என்றார்.
இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவரும் நிலையில், பிரதமர் மோடி மூன்றாம் நபர் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், டிரம்ப் கூறியதை வைத்து அரசியல் செய்து வருகின்றன.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூரின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்க்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா நிராகரித்துவிட்டது என பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் டார் கூறியுள்ளார்.
மேலும், டெல்லி உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் இஸ்லாமாபாத் நட்புறவை நாடுவதாகவும் அவர் கூறினார்.
தோஹாவில் அல் ஜசீரா ஊடகம் பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தாரிடம் நடத்திய இண்டர்வியூவின்போது, இந்தியாவுடன் பேச்சுவார்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியது.
இதற்கு அவர் அளித்த பதிலில், , “இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இந்தியா இது இருதரப்பு விஷயம் என்று கூறி திட்டவட்டமாக மறுத்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடனான சந்திப்பின்போது கூட இந்தியாவுடனான பேச்சுவார்த்தை பிரச்சினையை எழுப்பினேன். ஆனால், ரூபியோ, இது இருதரப்பு பிரச்சினை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று தெரிவித்துவிட்டார்.
இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எந்தவொரு மத்தியஸ்தத்தையும் இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. அதனை ஏற்கவில்லை.
இவ்வாறு இஷார் தார் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ந வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா மூன்றாம் தரப்பின் பங்கை நிராகரித்துவிட்டதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. போர் நிறுத்த நடவடிக்கையில் மூன்றாம் தரப்பு தலையீடு இருந்ததாக இந்தியாவின் பிம்பத்தை குறைத்து மதிப்பிட்டு பிரச்சாரம் நடத்தியவர்கள் இப்போது மன்னிப்பு கேட்பார்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.