டெல்லி: ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலந்து பைல்ஸ் என்ற பெயரில் கர்நாடகாவில் ஒரு தொகுதியில், 6018 வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ராகுல்கந்தி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவரது குற்றச்சாட்டு, தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், “எந்தவொரு வாக்கையும் ஆன்லைன் மூலமாக நீக்க முடியாது. 2023 ஆம் ஆண்டில், ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு சில முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் அவை தோல்வியடைந்துள்ளது. மேலும் அந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணைய புகாரின பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தரவுகள் பதிவுகளின்படி, ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2018ல் பா.ஜ.க வேட்பாளர் சுபாத் குட்டேதாரும், 2023 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பி.ஆர்.பாட்டீலும் வெற்றி பெற்றனர்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் விளக்கம் – விவரம்:
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான வார்த்தைகளில் பதில் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை. இந்திய தேர்தல் ஆணையத்தின் உண்மை சரிபார்க்கும் குழு இதனை உறுதிப்படுத்துகிறது. ராகுல் காந்தி கருதுவதைப் போல, எந்த ஒரு வாக்காளரையும் எவர் ஒருவரும் ஆன்லைனில் நீக்க முடியாது.
உரிய நடைமுறை இல்லாமல், எந்தவொரு வாக்காளரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபர் கூறுவதை கேட்காமல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க முடியாது. கடந்த 2023-ல் கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் வாக்காளர்களை மோசடியாக நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி, 2018 தேர்தலில் பாஜகவின் சுபாஷ் குட்டேதர் வெற்றி பெற்றார், 2023-ல் காங்கிரஸ் கட்சியின் பி.ஆர்.பாட்டீல் வெற்றி பெற்றார்.” என தெரிவித்துள்ளது.