ஓமலூர்: கர்சிப்பால் முகத்தை துடைப்பதை வைத்து அரசியல் செய்வது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது என கூறிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி எதிர்க்கட்சியாக இருக்கும்போது கருப்பு காட்டியவர், இப்போது வெள்ளைக்கொடி காட்டுவது ஏன் என்றும். சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்த மனநிலை சரியில்லாதவர் முதல்வர் ஸ்டாலின் என்றும் சாடினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு காரில் திரும்பியபோது, தனது முகத்தை கர்ச்சிப்பால் மூடியதாக ஊடங்களில் செய்திகள் வெளியானது. அதுதொடர்பான வீடியோவும் வெளியாது. இதை வைத்து திமுக உள்பட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், என்னுடைய டெல்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளன. அனைவரிடமும் சொல்லிவிட்டே அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றேன். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசு வாகனத்தில்தான் சென்றேன். அமித் ஷா வீட்டில் இருந்து வெளியே வந்தபோது கர்சீப்பை எடுத்து முகத்தை துடைத்தேன். நான் என் முகத்தை துடைத்ததில் என்ன அரசியல் உள்ளது. முகத்தை துடைத்ததை வீடியோ எடுத்து அதை வெளியிடுவதா? என சாடியதுடன்,
துணை குடியரசு தலைவரை நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தேன். அவருக்கு வாழ்த்து கூறினேம். அப்போதும் நான் அரசாங்க காரில் தான் சென்றேன். இதை எல்லாம் திட்டமிட்டு பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடுவார்கள் என்று தெரிந்து தான் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசாங்கத்திற்கு சொந்தமான காரில் தான் நான் அவரை சந்திக்க சென்றேன்.
பிறகு உள்துறை அமைச்சரை சந்திக்கும் போதும், நானும் கட்சி நிர்வாகிகளும் அரசாங்க காரில் தான் சென்று அவரை சந்திதேன். சந்தித்துவிட்டு அவர்கள் வெளியில் சென்று விட்டார்கள். நான் அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியேறினேன். அப்போது காரில் ஏறுவதற்கு முன் முகத்தை துடைக்கிறேன் அப்போது அதை வைத்து அரசியல் பன்னியது வெக்கமாகவும் வேதனையாகவும் உள்ளது.
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி என்னை விமர்சனம் செய்து வருகிறார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படி எல்லாம் நடந்துகொண்டார்கள் என அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்த போது யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்ற காட்சியை ஊடகம், பத்திரிக்கை மக்கள் இடத்திலே காண்பித்து விட்டனர்.
“இதே ஸ்டாலின் நான் பேரவையில், பெரும்பான்மையை நிரூபித்தபோது, சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்தார். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்தான் இப்படி செய்வார்கள். அப்படிப்பட்ட நிலையில் வந்தவர், இன்று இப்படி பேசுவதை ஏற்க முடியாது; திமுக எம்.எல்.ஏ. மருத்துவமனையில் கிட்னி முறைகேடு போன்ற தீவிர பிரச்னைகள் நிலவி வரும் சூழ்நிலையில், நான் முகத்தை மூடியதா பிரச்சினை?”
ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு. பிரதமர் தமிழகம் வந்த போது திமுகவினர் கருப்புக்கொடி காட்டினர். எதிர்க்கட்சியாக இருந்த போது இப்படி பட்ட நிலைப்பாடு. ஆட்சியில் உள்ள போது பிரதமர் சென்னை வந்தபோது வெள்ளை குடை பிடித்தவர். எதிர்க்கட்சியாக இருக்கும் போது கருப்புக்குடை பிடித்தவர். இது தான் திமுகவின் நிலைப்பாடு.
இவ்வாறு கூறினார்.