சென்னை: கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? என்று கூறிய டிடிவி தினகரன், அங்கு நடந்த சம்பவத்தை செய்தியாளர்களிடையே தெரிவித்தார். எடப்பாடி சொல்வது பொய் என்று கூறியதுடன், அப்போது அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல, அதிமுகவின் 112 எம்எல்ஏக்கள்தான் என்றார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அதை கண்டுகொள்ளாமல், செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து அறிவித்தார். இதற்கு பதில் கூறிய செங்கோட்டையனும், கட்சி தொண்டர்களின் விருப்பதையே கூறியதாக தெரிவித்துவிட்டு அமைதியாக போய் விட்டார்.
இதற்கிடையில், செங்கோட்டையனின் முயற்சிக்கு ஓபிஎஸ், சசிகலா, டிடிவிஎன கட்சியினல் பிரிந்தவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால், அதுகுறித்து எடப்பாடி முறையான பதில் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது பா.ஜ.க. தான் என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார் இந்த பரபரப்புக்கு மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி சென்றிருகிகாறர். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாநில பாஜக தலைவர் நயினாரும் டெல்லியில் முகாமிட்டு உள்ளார். இதனால் சந்திப்பு பேசும்பொருளாக மாறி உள்ளது.
இந்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏ.க்கள் தானே தவிர பா.ஜ.க. அல்ல என்று எடப்பாடியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.. “கூவத்தூரில் என்னிடம் பேசிய பழனிசாமி, வாக்கெடுப்புக்கு முன்னர் நான்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்ல வேண்டாம்; யாரும் கையெழுத்து போட மாட்டார்கள் என பழனிசாமி தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்எல்ஏக்களே தவிர பாஜக அல்ல. கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால்தான் பழனிசாமி முதல்வர் ஆனார். ஆனால், தற்போது அப்பட்டமாக பொய் பேசி வருகிறார்.
வாக்கெடுப்பின் போது 122 எம்எல்ஏக்களில் எத்தனை பேர் பிச்சுக்கொண்டு போக இருந்தார்கள். அவர்களை யார் தடுத்து நிறுத்தியது. செம்மலை எல்லாம் தாண்டி குதித்து ஓடினார். பழனிச்சாமி என்றால் நாங்கள் இருக்க மாட்டோம் என்றார். வாக்கெடுப்பின் போது அவரை காப்பாற்றியது யார்?. எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்றவர், கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டதால் தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். சசிகலா கூறியதால் தான் 122 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்ததால் தான் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.
அதிகாரத்தில் இருந்தும் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சராக முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி பிதற்றுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு கேள்வி கேட்க வேண்டாம்.
பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை எனக்கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி. துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிசாமி நன்றி பற்றி பேசுகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என இதுவரை அமித்ஷா குறிப்பிடவில்லை. நீங்கள் விரும்புபவர் தான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அமித்ஷா எங்களிடம் கூறியிருந்தார். டெல்லிக்கு சென்று 6 கார்கள் மாறிமாறி திருட்டுத்தனமாக அமித்ஷாவை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவிற்கு தற்போது உள்ள 20 சதவீத வாக்குகளும் வரும் தேர்தலில் 10 சதவீதமாக குறையத்தான் போகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் பழனிசாமி தோற்பதற்கு நாங்கள் காரணமில்லை. அவர்தான் காரணம். தன்மானம் தான் முக்கியம் என பேசிவரும் எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லி சென்றது ஏன்? எடப்பாடி பழனிசாமியை தாக்கிப்பேசினால் அவரால் தாங்க முடியாது.
இவ்வாறு காட்டமாக கூறினார்.