ஆவடியில் 1,000 ரூபாய் எடுக்க ஏடிஎம் போன பெண், அடுத்த சில மணி நேரத்தில் தனது கார்டில் 80,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக வந்த தகவலால் அதிர்ச்சி.

சிசிடிவிக்களை போலீசார் ஆராய்ந்ததில் பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் கல்லூரி பேராசிரியர் திம்மராயப்பா என்பவர் தாம்பரம் போலீசாரிடம் சிக்கினார்.

40 வயதான திம்மராயப்பா கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி என்பதும் ஆன்லைன் முதலீட்டில் பெரும் பணத்தை இழந்ததால் ஏடிஎம் கொள்ளையனாக மாறியது விசாரணையில் தெரியவந்தது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இவர் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது, மெஷினில் இருந்து பணம் வெளியே வராதவாறு சென்சாரை குழப்பி விடுவார்.

பணம் வராமல் தடுமாறும் வாடிக்கையாளருக்கு உதவுவது போல் PIN நம்பரை தெரிந்து கொண்டு பின்னர் குளோனிங் முறையில் ஏடிஎம் கார்டு தயாரித்து தொடர்ந்து கைவரிசை காட்டியுள்ளார்.

50க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் கார்டுகள் பிடிபட்டுள்ளதால் ஏராளமானோர் பணத்தை இழந்திருக்கலாம் என்கின்றனர் போலீசார்.