தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சஃபாரி வேர்ல்ட் பாங்காக்கில் என்ற உயிரியல் பூங்காவில் அங்கு பராமரிப்பாளராக பணிபுரியும் ஊழியரை சிங்கங்கள் தாக்கியதில் உயிரிழந்தார்.

58 வயதான ஜியான் ரங்காரசமீ என்ற உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் சஃபாரி மண்டலத்தில் வாகனத்தில் இருந்து இறங்கி கீழே இருந்த ஏதோ ஒரு பொருளை எடுக்க முயற்சித்தார்.

அப்போது அவரது பின்னால் சுமார் 30 அடி தூரத்தில் இருந்து ஓடிவந்த சிங்கம் ரங்காரசமீ தலையில் தாக்கி அவரை கீழே தள்ளியது.

பின்னர் அந்த சிங்கத்துடன் சேர்ந்து மேலும் மூன்று சிங்கங்கள் அவரை தாக்கியதுடன் அவரை கடித்துக் குதறியது.

இதனால் சஃபாரிக்கு வாகனத்தில் வந்த பார்வையாளர்கள் அலறி கூச்சல் போட்டனர்.

அலறல் சத்தம் கேட்டு பூங்காவின் மற்றொரு பராமரிப்பாளர் ஓடி வந்து சிங்கங்களை விரட்டினார்.

சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஜியான் ரங்காரசமீயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சஃபாரி வேர்ல்ட் பாங்காக்கில் சிங்கத்தை பார்க்க நடந்தும் மற்றும் வாகனத்திலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் இன்று காலை 11 மணியளவில் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து அந்த உயிரியல் பூங்கா காலவரையின்றி மூடப்பட்டது இதுகுறித்து தெரிவித்த பூங்கா நிர்வாகம் பூங்காவின் 40 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறுவது இதுவே முதல் முறை என்று தெரிவித்துள்ளது.