டெல்லி மாரிஸ் நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரிக்குச் செல்ல கடந்த திங்களன்று டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளார்.

அவர் வாகனத்தில் ஏறி சிறிதுதூரம் சென்றதும் 48 வயது மதிக்கத்தக்க டாக்ஸி ஓட்டுநர் இளம் பெண் முன் சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி வாகனத்திலிருந்து இறங்கி காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

கல்லூரி மாணவி எழுத்துப்பூர்வ புகார் அளித்ததை அடுத்து, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து டாக்சி ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

சிசிடிவி காட்சிகளை வைத்து ஓட்டுனரை அடையாளம் கண்ட போலீசார் லோம் சங்கர் என்பவரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவரின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, பெண்ணின் வாக்குமூலம் நீதிபதி முன் பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.