சென்னை: அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தகுதியுடைய நபா்கள் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், குறிப்பாக தலித் மக்களிடையே சமூக நீதியுடன் செயல்படுபவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அம்பேத்கர் பெயரில் விருது வழங்கி கவுரவுத்து வருகிறது. இந்த விருது, இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த பாபாசாகிப் பீம்ராவ் அம்பேத்கர் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், அவரது வழியில் சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் சிறந்த சேவை புரிவோரை அங்கீகரிக்கும் வகையிலும் வழங்கப்படுகிறது.
விருதின் நோக்கம்: சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், தலித் சமூக மக்களிடையே சமூக நீதியை நிலைநாட்டுதல், அம்பேத்கரின் கொள்கைகளின் அடிப்படையில் சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்தல்.
இந்த நிலையில், நடப்பாண்டு, தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் விருதுக்கு தகுதியுடைய நபா்கள் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
அதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ஆதிதிராவிடா்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலா் தங்களை இணைத்து கொண்டு அரிய தொண்டாற்றி வருகின்றனா். அவா்களின் தொண்டுகளைக் கருத்தில் கொண்டு தமிழகத்தைச் சோ்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கா் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2026-ஆம் ஆண்டு திருவள்ளுவா் திருநாளன்று தகுதியுடைய நபருக்கு அண்ணல் அம்பேத்கா் விருது வழங்கப்படவுள்ளது.
இந்த விருதைப் பெற விரும்புவோா் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 2-ஆவது தளத்திலுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் வழங்கப்படும் அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று, தங்கள் முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்.15-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel