டெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்காளர் அடையாள அட்டை பெற்று வாக்களித்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர்  போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததா என்பதை விசாரிக்க வலியுறுத்தி கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம். பி. யுமான சோனியா காந்தி மீது  பாஜகவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.  முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏப்ரல் 1983 இல் முறையாக இந்திய  குடிமகனாக ஆவதற்கு முன்பு இந்திய வாக்காளர் அந்தஸ்தைப் பெறுவதற்காக ஆவணங்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டி டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஒரு கிரிமினல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய வழக்கறிஞர் நாரங்,  மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மனைவியான சோனியா காந்தியின் பெயர்,  அவரது மறைந்த மைத்துனர் சஞ்சய் காந்தியின் பெயருடன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாகவும், பின்னர், இதுகுறித்த புகாரின் பேரில்,  1982 ஆம் ஆண்டு வாக்காளர் பபட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டியதுடன்,  , அத்தகைய நீக்கம் வாக்காளர் பட்டியலில் அவரது முந்தைய நுழைவு ஒழுங்கற்றது என்பதைக் குறிக்கிறது. அப்படியிருக்கையில்  அவர்பெயர் மீண்டும்   எப்படி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும்,   இந்திய குடிமக்கள் மட்டுமே வாக்காளர்களாக பதிவு செய்ய தகுதியுடையவர்கள் என்றவர்,  ஆவணங்களை மேற்கோள் காட்டி, தனது குடியுரிமை வழங்கப்படுவதற்கு முன்பு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதைப் பாதுகாக்க போலி அல்லது பொய்யான ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று  தெரிவித்துள்ளார். அது தொடர்பானஆவனங்கள் புகாரில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  “ஒரு பொது அதிகாரம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது, ஒரு மோசடி நடந்ததாகத் தெரிகிறது” என்று  கூறியதுடன், தனது புகார் கூறித்து,  டெல்லி காவல்துறை மற்றும் மூத்த அதிகாரிகளை ஒரு புகாருடன் அணுகிய போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மனுதாரருக்கு நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்றவர், தனது புகாரின் பேரில்,  எஃப். ஐ. ஆர் பதிவு செய்வதற்கும், குற்றம் சாட்டப்பட்ட குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்பது தெரியவில்லை. இந்த புகார் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்று வாக்களித்த சோனியா காந்தி! பாஜக குற்றச்சாட்டு…