இம்பால்: இரண்டு ஆண்டுகளுக்கு மணிப்பூரில் அமைதி திரும்பும் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது. மத்தியஅரசுடன் மைதேயி, குகி குழுக்கள் உடன்பாடு செய்துள்ள நிலையில், அங்கு அமைதி திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டு, போக்குவரத்த சகஜமாக நடைபெறும் வகையில் இரு அமைப்புகளும் ஒப்புகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மைதேயி, குகி சமுதாயத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து 258 பேர் உயிரிழந்தனர். 1,108 பேர் காயமடைந்தனர். 400 தேவாலயங்கள், 132 இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. சுமார் 60,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது. பலரும் இன்றளவும் வீடு திரும்ப முடியாமல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக, மணிப்பூர் – நாகாலாந்து இடையே மிக முக்கியமான இணைப்பாக உள்ள என்எச்-2 தேசிய நெடுஞ்சாலை கடந்த 2023 முதல் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் நிலவும் சிக்கல் தீரும். இதன்மூலம், கலவரத்தால் புலம்பெயர்ந்த மக்கள், நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் துயரங்கள் சற்றே குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதுபோல இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் நிலவும் சிக்கல் தீரும். இதன்மூலம், கலவரத்தால் புலம்பெயர்ந்த மக்கள், நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் துயரங்கள் சற்றே குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. புதிதாக அமைக்கப்பட்டுள்ள பைரபி – சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி முதலில் மிசோரம் செல்ல உள்ளார் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலை எண் 2 திறக்கப்படுவது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது கவனம் பெறுகிறது.
முன்னதாக, மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. புதிதாக அமைக்கப்பட்டுள்ள பைரபி – சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி முதலில் மிசோரம் செல்ல உள்ளார் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலை எண் 2 திறக்கப்படுவது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது கவனம் பெறுகிறது.
வன்முறை நடைபெற்று வந்த மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் மோடி செல்லாத நிலையில், அதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி பிரசாரம் செய்து வந்தன. இந்த நிலையில், வரும் 13-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்துக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழலில் குகி சமுதாயத்தின் நிர்வாக குழுவான குகி சோ கவுன்சில், மைதேயி சமுதாயத்தின் நிர்வாக குழுவான ஐக்கிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் மூத்த நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் குகி சமுதாயத்தின் தலைமை அமைப்பான குகி சோ கவுன்சில், மைதேயி சமுதாயத்தை சேர்ந்த நிர்வாக அமைப்பான ஐக்கிய மக்கள் முன்னணியின் மூத்த நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கடந்த சில நாட்களாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
இதன்படி தேசிய நெடுஞ்சாலை 2-ஐ திறக்க குகி சோ கவுன்சில் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் மணிப்பூரில் தடையற்ற வர்த்தக போக்குவரத்து தொடங்கும். தேசிய நெடுஞ்சாலை 2-ல் பணியாற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குகி சோ கவுன்சில் முழு ஒத்துழைப்பு வழங்கும். குகி சோ கவுன்சில், ஐக்கிய மக்கள் முன்னணி, மத்திய அரசு இடையே முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட அனைத்து தரப்பினரும் உறுதி அளித்துள்ளனர்.
கிளர்ச்சிக் குழுக்களிடம் இருக்கும் ஆயுதங்களை அருகில் உள்ள சிஆர்பிஎப், பிஎஸ்எப் முகாம்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மணிப்பூரில் சில வெளிநாட்டினர் ஊடுருவி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிளர்ச்சிக் குழுக்களின் முகாம்கள் மூடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.