ஓசூர்: தொழில்நகரமான ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோட அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது.
அதன்படி, ஒசூர் புதிய பேருந்து நிலையம் அருகே துவங்கி ஜெனாபெண்டா வரை 6 கி.மீ. தூரத்துக்கு ரிங் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.138 கோடியில் ரிங் ரோடு அமைக்க நெடுஞ்சாலைத் துறை கருத்துரு தயார் செய்து ஆட்சியருக்கு அனுப்பி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 44ல் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஓசூர் அவுட்டர் ரிங் ரோடு திட்டமிடப்பட்டுள்ளது.

ஓசூரை பொறுத்தவரையில் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் 13வது தொழில் நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. ஓசூர் அதிவேக தொழில் வளர்ச்சி நகரமாக மாறி உள்ளதால், அங்கு நாளுக்கு நாள் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. மேலும், இந்நகருக்குள் தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அங்குள்ள சாலை மற்றும் புறவழிச்சாலைகளிலும் கடுமையான வாசன நெரிசல் ஏஎற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு – கர்நாடகா எல்லைக்கு முன்பாக ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் 2023ஆம் ஆண்டே தொடங்கிவிட்டன. ஆனால் பல்வேறு காரணங்கள் 2 ஆண்டுகளாக இழுபறியாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் மேம்பாலப் பணிகள் முடிவடையவில்லை. இது நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக புதிய ரிங்ரோடு அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரிங் ரோடு, ஒசூர் புதிய பேருந்து நிலையம் அருகே துவங்கி ஜெனாபெண்டா வரை 6 கி.மீ. தூரத்துக்கு ரிங் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.138 கோடியில் ரிங் ரோடு அமைக்க நெடுஞ்சாலைத் துறை கருத்துரு தயார் செய்து ஆட்சியருக்கு அனுப்பி உள்ளது.
இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் பணிகள் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஓசூர் அவுட்டர் ரிங் ரோடு திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அடுத்து வந்த கொரோனா பெருந்தொற்றால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து 2021ல் திமுக அரசு பதவி ஏஎற்றதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ரூ. 320 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இதில் நிலம் கையகப்படுத்துதல் 215 கோடி ரூபாய், கட்டமைப்பு பணிகள் 85 கோடி ரூபாய், ஏற்கனவே இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை வேறு இடங்களுக்கு அகற்றி வைப்பதற்கு 15 கோடி ரூபாய், எதிர்பாராத செலவுகளுக்கு 5 கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது.