சென்னை: மத்தியஅரசுக்கு எதிராக தன்னிச்சையாக உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்ட திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், தனது உண்ணா விரதத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு மாநில தலைவர் செல்வபெருந்தகை ஜுஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித்தொகையை வழங்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் கடந்த 29ம்தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இது பரபரப்பை எற்படுத்தியது. அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் அவரை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிசிச்ளை அளித்தனர்.
இந்திய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய பள்ளிக் கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டுமெனக் கோரி, அதாவது, மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சமக்ர சிக்க்ஷா அபியான் (SSA) நிதியான 2,152 கோடி ரூபாயை சில காரணங்களைக் கூறி நிறுத்திவைத்திருக்கிறது. அதனைக் கண்டித்தும், அந்த நிதியை விடுவிக்கக்கோரியும் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்த காங்கிரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தனது ஆதரவாளர்கள் சிலருடன் சேர்ந்து தொடங்கினார்.

அவருடைய உடல்நிலை மோசமானதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தனது உண்ணாவிரதத்தை முடித்து கொள்வதாக நேற்று (திங்கட்கிழமை இரவ) அறிவித்தார். கட்சி தலைவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்ததாகவும் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாஜக அரசு தமிழக மக்கள், குறிப்பாக மாணவர்களின் கல்வி உரிமைகளை சிதைத்து வருகிறது. தமிழ்நாட்டின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மீது பாஜக செய்து வரும் அநீதிகளை மக்களிடம் அம்பலப்படுத்தவே இந்த உண்ணாவிரதத்தை தொடங்கினேன். பாஜக எப்போதும் தமிழர் விரோதப் போக்கையே கடைபிடித்து வருகிறது என்பது எனக்கு தொடக்கத்தில் இருந்தே தெரியும். அது அவர்களின் இயல்பில் உள்ளது. உடல்நிலை, மருத்துவர்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமையின் கோரிக்கை ஏற்று இந்த உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருகிறேன்
இந்தப் பிரச்னையின் தீவிரத்தை மக்கள் கவனத்திற்கு கொண்டு வர இந்த உண்ணாவிரதம் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது,” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக திருவள்ளுர் எம்.பி. சசிகாந்த் உண்ணாவிரதத்தை மாநில காங்கிரஸ் கட்சி தலைவரோ, முக்கிய காங்கிரஸ் தலைவர்களோ தொடங்கி வைக்காத நிலையில், அவரது திடீர் உண்ணாவிரதம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது. மேலும், கர்நாடக தர்மசாலா சம்பவத்தின் பின்னணியில் சசிகாந்த் செந்தில் இருப்பதாகவும், அதை மடை மாற்றவே அவர் திடீர் உண்ணாவிரதமம் இருந்தாகவும் கூறப்படுகின்றன. மேலும், அவரது உண்ணாவிரதத்தை மாநில தலைவர் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தும் பேசும்பொருளாக மாறியது.
இதுகுறித்து பேசிய மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை,மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் சகிகாந்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டதுடன், “திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு காரணமாக, தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் காங்கிரஸ் சார்பில், ஓட்டு திருட்டு பிரச்சாரம் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தை மடைமாற்றம் செய்கிறோமோ என்கிற அச்சம் இருக்கிறது.
ஆகவே தலைவர் ராகுல் காந்தியின் போராட்டத்துக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். உங்களுடைய உண்ணாவிரதத்தை இதோடு முடித்துக்கொள்ளுங்கள். நல்ல நோக்கத்தோடு செய்திருக்கிறீர்கள். ஆனால் அதற்கான தருணம் இதுவல்ல. தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு பிரச்சாரத்துக்கு நாமே தடையாக இருந்துவிடக்கூடாது,” என கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கட்சியில் ஒற்றுமை இல்லை என்பதையும் பறைசாற்றியது.