டெல்லி: ஆசிரியர் பணிக்கு ‘டெட்’ தேர்வு கட்டாயம்   என்பதை உறுதிபடுத்தி உள்ள உச்சநீதிமன்றம்,  ஆசிரியர்கள்  பணியில் தொடர தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில்,  5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் தேர்வு எழுத வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதுடன்,  தேர்ச்சி பெறாவிடில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று  ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது அரசு மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில், கல்வித் தரத்தைப் பராமரிக்கவும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு இடையேயான பாகுபாட்டைத் தடுக்கவும் TET ஒரு உலகளாவிய தேவையாக நிறுவப்பட்டது.

இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மற்றும்   சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த உத்தரவு  இது சிறுபான்மை பள்ளிகள் உட்பட அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களை பாதிக்கிறது என்று கூறப்பட்டிருந்தது. அதனால், இதுதொடர்பாக,  இது ஏப்ரல் 2025 இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  நீதிபதிகள் தீபன்கர், தத்தா அமர்வு, விசாரணையைத் தொடர்ந்து கூறிய நிதிபதிகள்,

TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் ஆசிரியர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்  என்பதை உறுதி செய்தது.

5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற 5 ஆண்டுகள் உள்ளவர்கள், டெட் தேர்வை எழுத தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிடில் வேலையை விட்டு வெளியேறலாம், அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், சிறுபான்மை நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா? எனக்கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம்,  இதுகுறித்து மேலும் விசாரணை நடத்த உயர் அமர்விற்கு இந்த வழக்கை பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுபவர்கள், டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.  இதன்படி தமிழகத்தில் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகிறார்கள். மேலும் டெட் தேர்ச்சி பெற்ற பலருக்கு இன்னும் தமிழ்நாடு அரசு பணி வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபன்கர், தத்தா அமர்வு,  கடுமையான உத்தரவினை வழங்கி உள்ளனர். 

டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் தீர்ப்பின் போது பல்வேறு கருத்துக்களையும் நீதிபதிகளையும் கூறியுள்ளனர். இன்றைய  டிஜிட்டல் காலக்கட்டத்தில், மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும், பாடங்களை நடத்தவும், ஆசிரியர்களும் தங்களை நவீன காலத்திற்கு ஏற்றவாடு மேம்படுத்தி கொள்ள வேண்டியதும் அவசியம் என்றும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியில் தொடரும் ஆசிரியர்கள் டெட் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால் வேலையை விட்டு வெளியேறலாம். இறுதி சலுகையுடன் கட்டாய ஓய்வை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதுடன்,  ஓய்வு பெற ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருக்க கூடிய ஆசிரியர்கள் டெட் தேர்வை எழுதாமல் பணியில் தொடரலாம் என்று கூறியுள்ளனர்.

இந்த தீர்ப்பை சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பாதிக்கும் பட்சத்தில் இது தொடர்பாக விசாரிக்க அதற்கான வழிமுறைகளை கண்டறிய இந்த வழக்கை உயர் அமர்வுக்கு பரிந்துரைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.