கெய்ரோ: இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. “ஏமனில் உள்ள சனா பகுதியில் ஹவுதி பயங்கரவாத ஆட்சியின் இராணுவ இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக” இஸ்ரேலிய இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.

இந்த தாக்குதலில் ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்தின் பிரதமர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய ஆதரவு ஹவுதிகள் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் பிரதமர் அகமது அல்-ரஹாவி மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் காரணமாக, ஹவுதிகள் இஸ்ரேலுக்கு எதிராக மீண்டும் மீண்டும் ஏவுகணைகளை ஏவியுள்ளனர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல் ஹவுதிக்கள் டமீது தாக்குதல் நடத்தியது. ஹவுதி தலைநகர் ஏமனால் ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலால் இடைமறிக்கப்படுவருதுடன், அவர்களின் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்து வருகிறது.
இந்த நிலையில், ஏமன் தலைநகரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தங்கள் ஹவுத்தி பிரதமர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை ஹவுத்தி கிளர்ச்சி யாளர்களும் உறுதிபடுத்தி உள்ளனர்.