சென்னை” கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது ன தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன் அறநிலையத்துறை சார்பில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, அறநிலையத்துறைக்கு எதிராக பொலுநல வழக்கு தொடரப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் வணிக வளாகம் கட்டக்கூடாது என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படடது.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையை அடுத்து, கோவில் அருகே கோவில் நிலமாக இருந்தாலும் அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்று தீர்மானமாக கூறிய நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு யோசிக்கும் தருணம் இது என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் கோவில் நிதி மூலம் திருமணமண்டபங்கள்,வணிக கட்டிடங்கள்,கல்லூரிகள் உள்ளிட்ட இதர கட்டுமானங்கள் கட்டிட சுமார் ₹ 800 கோடி அளவில் கோவில் நிதி பயன்படுத்தப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது
மேலும், திருவண்ணாமலை கோவில், ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்துவது குறித்த மாற்று திட்டம் சம்பந்தமாக அறிக்கை தர அறநிலையத்துறைக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை செப்டம்பர் 7ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.