சென்னை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், சென்னையின் பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 24மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன் இந்த சிலைகள் சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் நீர்நிலைக்களில் கரைக்கப்படும் என காவல்துறை அறிவித்து உள்ளது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், மாநிலம் முழுதும், 35,000 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. இந்த சிலைகள் பாதுகாப்பு பணியில், 65,000 போலீசார் ஈடுபட்டு உள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இத்ந நிலையில், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பாக காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்த உள்ளது. தமிழ்நாட்டில், கடந்த சில வருடங்களாகவே நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க கணபதி சிலையின் உயரமானது 10 அடிக்கு மிகாமல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும், அந்த பகுதியில் கோஷமிடக்கூடாது, மற்ற மத வழிபாட்டு ஸ்தலங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த விதிகளின்படி, சென்னையில், 1,500 சிலைகள் காவல்துறையினரின் அனுமதியுடன் வைக்கப்பட்ட உள்ளது. இந்த விநாயகர் சிலைகளுக்கு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து சிலைகளுக்கும் தலா ஒரு போலீசார் வீதம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 16,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், வரும் 30, 31ந்தேதிகளில் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என கூறியுள்ள காவல்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி, சென்னையில்,பட்டினப்பாக்கம் சீனிவாச நகர், பாலவாக்கம் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையில் காவல்துறையினர் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்க எற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஊர்வலங்களின் போது மக்கள் கூட்டமாக விநாயகர் சிலைகளை வழிபட்டு, இசையுடன் குத்தாட்டம் போட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். காவல்துறை மற்றும் அரசு, அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
அனுமதியளிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை எடுத்துச் செல்லவும், குறிப்பிட்ட நேரத்தில் கரைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிலை கரைப்பு செய்யும் இடங்களில், அசம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கின்றனர். டிரோன்கள் (drones) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம், காவல்துறை ஊர்வலங்களைக் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.