பாலஸ்தீனப் பகுதியான காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை மறுத்துள்ள இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் “காசாவில் பஞ்சம் இல்லை” என்று கூறியுள்ளதுடன், ரோமை தளமாகக் கொண்ட ஐபிசி குழுவின் அறிக்கையைக் கடுமையாக சாடியது,

காசாவில் பஞ்சம் நிலவுவதாக கூறியுள்ள ஐ.நா., 500,000 மக்கள் “பேரழிவு” பசியை எதிர்கொள்வதாக தெரிவித்தனர்.

மேற்கு ஆசியாவில் பஞ்சம் எனபது இதுவே முதல் முறை என்றும், “இஸ்ரேலின் திட்டமிட்ட தடைகள் காரணமாக” இந்த பஞ்சம் ஏற்படுத்தப்பட்டதாக ஐ.நா உதவித் தலைவர் டாம் பிளெட்சர் கூறியுள்ளார்.

பஞ்சம் முற்றிலும் தடுக்கக்கூடியது, காசா எல்லையில் குவிந்து கிடைக்கும் உணவுப் பொருட்களை இஸ்ரேலின் தடை காரணமாக பாலஸ்தீனப் பகுதிக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்று குற்றம்சாட்டினார்.

செப்டம்பர் மாத இறுதிக்குள் பஞ்சம் டெய்ர் எல்-பாலா மற்றும் கான் யூனிஸ் மாகாணங்களுக்கு விரிவடையும் என்று தெரிவித்துள்ள பிளெட்சர் இது பாலஸ்தீன பிரதேசத்தின் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கும் என்றும் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதாவது 6,41,000 மக்கள் பசி பட்டினிக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

பாலஸ்தீனப் பிரதேசத்தில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து ஐ.நா. நிறுவனங்கள் பல மாதங்களாக எச்சரித்து வருகின்றன.

இருந்தபோதும், இஸ்ரேல் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து வருகிறது.