ரஷ்யாவிலிருந்து ஹங்கேரிக்கு செல்லும் பெட்ரோல் குழாய் உக்ரைன் தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் பிரையான்சுக் மாகாணத்தில் ட்ருஸ்பா எண்ணெய் குழாய் மீது நடைபெற்ற தாக்குதலில் அந்தக் குழாய் வெடித்து பற்றி எரிந்தது.

இதனால் ஹங்கேரிக்கு குழாய் வழியாக எண்ணெய் அனுப்பும் பணி தடைபட்டுள்ளதால் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஹங்கேரி வெளியுறவு அமைச்சர் பீட்டர் சுஜிஜ்ஜார்டோ, இந்த எண்ணெய் குழாய் மீது கடந்த சில மாதங்களில் நடைபெற்றுள்ள மூன்றாவது மிகப்பெரிய தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் குழாய் மீதான தாக்குதல் ஹங்கேரியின் எரிசக்தி தேவையை வெகுவாக பாதிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பு நாடான ஹங்கேரிக்கு ஆதரவிக்காமல் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை சீர் செய்ய ஐந்து நாட்கள் வரை ஆகும் என்றும் கூறியுள்ள அவர் இதனால் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியா நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.