டெல்லி:  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக முறையான நடைபெறாத நிலையில், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு  அவை நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரின்போது,   எதிர்க்கட்சிகள் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் தீவிர வாக்காளர் சீர் திருத்தம் உள்பட பல்வேறு  கோரிக்கைகளை எழுப்பி அதுகுறித்து விசாரிக்க வலியுறுத்தி அவையில் அமளியில் ஈடுபட்டு அவையின் நேரத்தையும், மக்களின் வரிப்பணத்தையும் வீணடித்தனர்.

எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையேயும் சில சமயங்களில் மக்களவை மற்றும் மாநிலங்களை நடைபெற்ற நிலையில், ஒருசில மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தை தவிர மக்களவையில் வேறு அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.

இந்த லையில்,  மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் அவை தொடங்கியதும் காலை முதலே எதிர்க்கட்சிகளி அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து,  அவையை ஒத்தி வைத்த சபாநாயகர் பிர்லா மீண்டும் 12மணி கூட்டினார். அப்போதும் எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதால், அவையை  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

அப்போது பேசிய சபாநாயகர்,  மரியாதைக்குரிய கூட்டத்தொடர்கா  எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் ஒரு மாதம்  முடங்கி போனது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள்  அவையை புறக்கணித்தனர் என தனது வருத்தத்தை பதிவு செய்தார்.