சென்னை:  தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க தமிழரசு  இன்று காலை திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 50வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், அவரது சகோதரர் மு.க.தமிழரசுக்கு இன்று காலை திடீரென ஏற்பட்ட , தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக சென்னையின் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மு.க. தமிழரசு, கடந்த  கடந்த ஜனவரி மாதமும், திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த அவர், தற்போது மீண்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் திடீர் தலைசுற்றல் காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மு.க.தமிழரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.