சென்னை: திமுக பொருளாளர், மக்களவை குழுத்தலைவர் டி. ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர்டி. ஆர். பி. ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகா தேவி (79) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

ரேணுகா தேவி நுரையீரல் பாதிப்பு காரணமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட திமுக முன்னோடிகளுடன் நெருக்கமாக பழகி வந்த ரேணுகாதேவி, கட்சித் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்பு மிக்கவராக இருந்தார். அவரின் மறைவு திமுக வட்டாரங்களில் அதிர்ச்சியையும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறுதி சடங்குகள் இன்று மாலை சென்னை தி.நகர் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு இரண்டு மனைவிகள். ஒருவர் ரேணுகா தேவி, மற்றொருவருர் டி. ஆர். பி. பொற்கொடி. இவர்கள்மூலம் டி. ஆர். பாலுவுக்கு 5 குழந்தகள் உள்ளனர். அவர்களில் டி.ஆர். பி. ராஜ்குமார், டி. ஆர். பி. ராஜா, செல்வகுமார் பாலு மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
ரேணுகா தேவி நுரையிரல் பாதிப்பு காரணமாக பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில்,அவரதுஉடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 8 மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.