டெல்லி: சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வு மேற்கொண்டு விட்டு பூமி திரும்பிய  விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிரதமருக்கு சர்வதேச  விண்வெளி நிலையத்தில் பறந்த இந்திய தேசிய கொடியை பரிசளித்தார்.

இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி ப்ளோரிடாவில் இருந்து புறப்பட்ட அவர், 18 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு நடத்தினார். இதன் மூலமாக, 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு பயணித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்த நிலையில், சுபான்ஷு சுக்லாவை, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்த பிரதமர் மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்.

முன்னதாக,  பிரதமர் மோடியை சந்திக்க லோக் கல்யாண் மார்க் இல்லத்துக்கு வந்த   விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இஸ்ரோ விண்வெளி வீரர்களுக்கான ஜாக்கெட் அணிந்திருந்தார். பிரதமர் மோடி அவரை வரவேற்று,  அணைத்து,   அவரின் தோளில் கை வைத்துக்கொண்டு அவருடன் நடந்து சென்றார். இதைத்தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் உரையாடினர்.

அப்போது,   சுக்லா பிரதமருக்கு ஆக்சியம்-4 மிஷனின் மிஷன் பேட்ச் மற்றும் ஐ.எஸ்.எஸ்-க்கு எடுத்துச் சென்ற இந்திய மூவர்ணக் கொடியை பரிசாக வழங்கினார். ஏற்கனவே  ஜூன் 29 அன்று சுக்லா  விண்வெளியில் இருந்து இந்திய மோடியுடன் உரையாடியபோது, ஐ.எஸ்.எஸ்ஸில் பின்னணியில் இந்த இந்திய மூவர்ணக் கொடி பறந்து கொண்டிருந்தது. அந்த கொடியையே சுக்லா பிரதமரிடம் வழங்கினார்.

இதுகுறித்து,  செங்கோட்டையில் 79வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி,  இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருவதாகவும், குரூப் கேப்டன் சுக்லா ஒரு விண்வெளி பயணத்திலிருந்து திரும்பியுள்ளார். வரும் நாட்களில், அவர் இந்தியா திரும்புகிறார்,” என்று மோடி கூறியிருந்தார்.

சுக்லா இந்தியா திரும்புவதைக் குறிக்கும் வகையில், ‘சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் – 2047க்குள் விக்ஸித் பாரதத்திற்கான விண்வெளித் திட்டத்தின் முக்கிய பங்கு’ என்ற தலைப்பில் திங்களன்று மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்தியா திரும்பி சுபான்ஷூ சுக்லாவுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) தனது வரலாற்றுச் சிறப்புமிக்க வருகையைக் கொண்டாடுவதற்காக இங்குள்ள விமான நிலையத்தில் ஏராளமான மக்கள் மூவர்ணக் கொடியை அசைத்தும், டிரம்ஸ் அடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆக்ஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட இரண்டாவது இந்தியரான சுக்லா மற்றும் அவரது துணை விண்வெளி வீரராக நியமிக்கப்பட்ட பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும்,  , சுக்லாவை வரவேற்க அவரது மனைவி கம்னா மற்றும் மகன் கியாஷ் ஆகியோர் விமான நிலையத்தில் இருந்தனர்.

சுபான்ஷூ சுக்லாவுடன் உரையாடியது குறித்து பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சுபன்ஷு சுக்லாவுடன் ஒரு சிறந்த உரையாடல் இருந்தது. விண்வெளியில் அவரது அனுபவங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் லட்சிய ககன்யான் திட்டம் உட்பட பல்வேறு தலைப்புகளில் நாங்கள் விவாதித்தோம். அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் இருந்து இன்று பூமிக்கு புறப்பட்டனர் சுபான்ஷூ சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்கள்..!

விண்வெளியில் இருந்து இன்று பூமிக்கு புறப்பட்டனர் சுபான்ஷூ சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்கள்..!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பிரதமர் மோடியுடன் உரையாடினார் சுபான்ஷூ சுக்லா! வீடியோ