பாட்னா: பீகார் மாநிலத்தில், தேர்தல்ஆணையத்தின் தீவிர வாக்காளார் பட்டியல் சீர்திருத்தம் நடைபெறுவதற்கு எதிராக, மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமை யில் மாநில எதிர்க்கட்சிகளின் 16 நாட்கள் சுமார் 1300 கிமீ தூரம் நடைபெற உள்ளது. இநத மெகா வாக்குரிமை பேரணி (‘Vote Adhikar Yatra’ ) நேற்று (ஆகஸ்டு 17)ந்தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

பீகாா் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இங்குள்ள வாக்காளர் பட்டியலில் வெளிநாடுகளை அகதிகள் உள்பட பலர் போலியாக தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளது தெரிய வந்த நிலையில், அதை களையெடுக்கும் முயற்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கெண்டது. அதன்படி, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்மூலம் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி நாடாளுமன்றத்தையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் பிகாரில் மாபெரும் வாக்குரிமை பேரணியை நேற்று (ஆக. 17) தொடங்கியுள்ளன.
பீகார் மாநிலத்தின் சசாரத்தில் நடைபெற்ற விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கன்னையா குமார், ராஷ்திரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், கம்யூனிஸ்ட் தலைவர் தீபங்கர் பட்டாச்சார்யா, உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர்.
இந்த வாக்குரிமைப் பேரணி மூவண்ணக் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. மேடையில் நின்ற தலைவர்கள் பேரணியை பகல் 2.30 மணியளவில் மூவண்ணக் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். ராகுல்காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியானது மொத்தம் 16 நாட்கள் நடைபெறுவதுடன், சுமார் 1300 கி.மீ தொலைவு செல்லும் என்றும், மாநிலத்தின் 20 மாவட்டங்கள் வழியாக இந்த பேரணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பேரணியானது பாட்னாவின் காந்தி மைதானத்தை அடைந்து நிறைவுபெறுகிறது அன்றைய தினம், அங்கு பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடக்கிறது. அதை தடுக்கும் வகையில் ‘வாக்கு அதிகாரம் யாத்திரை’ தொடங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தேர்தல் ஆணையம் அரசின் ஏஜென்டாக மாறிவிட்டது” என்று கூறினார்.