திருநெல்வேலி:  ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த திமுக பிரமுகர் மனைவி, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டம் பெற்றார்.  இந்த விழாவில்  நெல்லை  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 739 பேருக்கு ஆளுநர் ரவி  நேரடியாக பட்டம் வழங்கினார் .

நெல்லை மனோன்​மணி​யம் சுந்​தரனார் பல்​கலை.​யில்  32வது  பட்​டமளிப்பு விழா​ நேற்று  வ.உ.சி. கலை​யரங்​கில் நடை​பெற்​றது. பல்​கலைக்​கழகம் மற்​றும் அதன் 104 உறுப்​புக் கல்​லூரி​களில் படித்த 37,376 பேருக்கு பட்​டங்​கள் வழங்​கப்பட்​டன.

இந்தநிகழ்ச்சியில், பங்​கேற்​ப​தாக அறிவிக்​கப்​பட்​டிருந்த தமிழக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன், விழா​வில் பங்​கேற்​க​வில்​லை. பல்​கலை.​யில் நடை​பெற்ற கடந்த 3 பட்​டமளிப்பு விழாக்​களி​லும் இணைவேந்​த​ரான உயர்​கல்​வித் துறை அமைச்​சர்​கள் பங்​கேற்​க​வில்லை  என்ற நிலையில், இதிலும் பங்கேற்கவில்லை. இ,தைத்தொடர்ந்து விழா தொடங்கியதும்,   துணைவேந்​தர் ந.சந்​திரசேகர் வரவேற்​றார். இந்​திய புவி காந்​த​வியல் நிறுவன இயக்​குநர் அ.பி.டிம்ரி பட்​டமளிப்பு விழா உரை​யாற்​றி​னார்.

பின்னர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.  அப்போது மாணவ மாணவிகளுக்கு ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கி வந்த நிலையில்,  நாகர்​கோ​விலைச் சேர்ந்த மாணவி வி.ஜீன் ஜோசப்  என்பவர்,   ஆளுநரிடம் பட்டம் பெறாமல், பல்​கலைக்​கழக துணைவேந்​தர் சந்திரசேகரிடம் பட்​டச் சான்​றிதழை கொடுத்​து, அவர் மூலம் பட்டம் வாங்கினார்.  அப்​போது துணைவேந்​தர் ‘ஆளுநரிடம் கொடுத்து பட்டம் வாங்​குங்​கள்’ என்று கூறினார். தனக்கு விருப்​பமில்லை என்று மாணவி கூறி​னார். ஆளுநரும் ‘ஓகே’ என்று கூறியதையடுத்​து,பட்​டச் சான்​றிதழை துணைவேந்​தரே கொடுத்​தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அதை கண்டுகொள்ளாத ஆளுநர் தொடர்ந்து மற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 739 பேருக்கு ஆளுநர் ரவி  நேரடி​யாக பட்​டங்​களை வழங்​கி​னார்.

இதற்கிடையில், ஆளுநரிடம் இருந்து பட்டத்தை பெற மறுத்த மாணவி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய  ஜீன் ஜோசப்,  “தமிழுக்​கும், தமிழக மக்​களுக்​கும் எது​வும் செய்​யாத ஆளுநரிடம் பட்​டம் பெற எனக்கு விருப்​பமில்​லை” என்​றார்.

இதையடுத்து ஜான் ஜோசப் யார் என்ற தகவல்கள் வெளியானது. இவரது கணவர் ராஜன், நாகர்​கோ​வில் மாநகர திமுக துணைச் செய​லா​ள​ராக பொறுப்பு வகிக்​கிறார் என்பதும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என்றும் கூறப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் உள்பட ஒவ்வொருவரும் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளராக இருக்கலாம். ஆனால், இதுபோன்ற ஒரு பொதுநிகழ்வில் ஒருவரை அவமதிப்பது, தமிழ்நாட்டுக்கே அவமானம், என்றும், இதுபோல ஆசிரியர்கள் மாற்று மதத்தினரே, மாற்று கருத்து உள்ளவர்கள் பாடம் நடத்தினால், அவர்களிடம் இவரைப்போன்றவர்கள் பாடம் படிக்க மாட்டார்களா என நெட்டிசன்கள்கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கல்விச்சாலைகளையும் தங்களது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தாதீர்கள் என கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், அது தமிழ்நாட்டுக்கு அவமானம் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதற்கிடையில், மாணவியின் நடத்தைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, இதுபோல முதல்வர் நிகழ்ச்சியில் ஒருவர் அவரை புறக்கணித்து, மாற்றாரிடம்  பெற்றால் அது சரியாக இருக்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.