திருமலை: திருப்பதி மலைப் பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag  கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்டு 15 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் பாஸ்டேக் எனப்படும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்ட்டு வருகிறது. இந்த சுங்கக்கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இருந்தாலும் சாலை பராமரிப்பு பணிக்காக என சுங்கக்கட்டணம் வசூலிப்பது தொடர்ந்து வருகிறது. இந்த சுங்கக்கட்டணத்தில் ஆகஸ்டு 15 முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில்,  ஆக.15-ம் தேதி முதல் திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு அலிபிரி சோதனைச் சாவடியில் அனுமதி இல்லை எனவும், பக்தர்களின் வசதிக்காக பாஸ்டேக் ரீசார்ஜ் மற்றும் அப்ளை செய்து புதிய ஐடி பெற கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை என்பதால் திருப்பதி செல்வோர் இதனை மறக்காமல் செய்துவிடுங்கள். அதன்படி, FASTag இல்லாத வாகனங்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படாது. FASTag இல்லாதவர்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள FASTag வழங்கல் மையத்தில் உடனடியாக FASTag பெறலாம்.

இந்த விதி ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வருகிறது, மேலும் பயணிகள் இந்த புதிய விதியை பின்பற்றி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், வாகன நெரிசலை குறைக்கவும், பயண அனுபவத்தை மேம்படுத்தவும் உதவும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.