இநத் நிலையில்,  தூய்மைப் பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 2023 முதல் அவ்வப்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 2023ல் நடைபெற்ற  சிஐடியு  போராட்டத்தின்போது, போராட்டக்கார்கள் உள்ளே செல்ல முடியாதவாறு, காவல்துறையினர், , ரிப்பன் மாளிகை வாயில்களைப் பூட்டி தடுப்பு வேலிகள் அமைத்தனர். பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் ரிப்பன் மாளிகை எதிரே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  அவர்களை காவல்துறையினர் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.

இந்த மறியல் போராட்டம் குறித்து பேசிய தூய்மை பணியாளர்கள்,,  10 ஆண்டுகள் பணிபுரியும் என்யுஎல்எம், தொகுப்பூதிய பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள், அம்மா உணவக தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருவதாக தெரிவித்தனர்.   ஆனால், திமுக அரசு,  மாநிலம் முழுவதும் தூய்மை பணிகளை தனியார் மயமாக்க தமிழ்நாடு அரசு  3 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சிகளில் நிரந்தர பணியே இல்லாமல் போகும். சென்னையில் உள்ள 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி 2 பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள   4 மண்டலங்களையும் தனியார்மயமாக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

எனவே, தனியார் மயத்தை கண்டித்து  போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. இதையடுத்து, மாநகராட்சியின் தனியார் மயம் சில ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது (2025) ஆகஸ்டு முதல் மீண்டும் தனியாருக்கு தாரை வார்க்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகஸ்டு1 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். குப்பை அள்ளும் பணியை தனியாருக்குக் கொடுத்து, அரசு வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது. என்யுஎல்எம் தொழிலாளர்களுக்கு மாநகராட்சி நேரடியாக வேலை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என பல கோரிக்கைளை வலியுறுத்தி போராடுகின்றனர்.

தனியார் நிறுவனங்கள் குறைந்த பட்ச ஊதியம் மட்டுமே வழங்கி வருவதால், அதை ஏற்க தூய்மை பணியாளர்கள் மறுப்பு தெரிவித்து இன்று 12வது நாளாக போராடி வருகின்றனர். இதற்கிடையில் மாநகராட்சி சார்பில், உடனே பணிக்கு திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், தூய்மை பணியாளர்கள், கோரிக்கை நிறைவேறும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம்  என கூறி உள்ளனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,  தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என  மறுப்பு தெரிவித்துடன்,   தூய்மை பணியாளர் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது. அவகாசம் தேவை எனவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை இதுவரை 4 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். 4 நாட்களாக நான்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். எந்த தூய்மை பணியாளரையும் பணியை விட்டு நீக்கவில்லை. சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்.

இவ்வாறு  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, அடையார், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்க மாநகராட்சி சார்பில் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

வடசென்னையில் உள்ள திரு.வி.க. நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி குடிமை அமைப்பால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.  ராயபுரம் மண்டலத்தில் குப்பை அகற்றும் தொழிலாளர்கள் 864 பேரும், திரு.வி.க.நகரில் 1,029 பேரும் உள்ளனர். இவர்களின் மூலம்  குப்பைகளை அகற்றி வந்த மாநகராட்சி, தற்போது இந்த பணியை தனியாரிடம்  ஒப்படைத்துள்ளதால், அதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.