சென்னை: நாளை நடைபெற உள்ள பாமக தலைவர் அன்புமணிய்ன் பாமக பொதுக்குழு தடை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஆனந்த் வெங்கடேண், பாமக நிறுவனர்  ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணியை இன்றுமாலை தனது அறைக்கு வரும்படி  உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி,   அன்புமணி, ராமதாஸ் இருவரும்  இன்று மாலை 5.30 மணிக்கு  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  அறைக்கு செல்கின்றனர்.

அன்புமணி பொதுக்குழு கூட்டுவதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது. இருவரும் இன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறைக்கு நேரில் வர ஆணையிடப்பட்டுள்ளது. இருவரும் மாலை 5.30 மணிக்கு தனது அறைக்கு வரும்படி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி,  பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று சென்னை  உயர்நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையை அடுத்து, தந்தை, மகன் இருவரையும், தனது அறைக்கு நேரில் வந்து சந்திக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், பாமக தலைவர் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள  அதிகார மோதல் இன்று பாமக இரண்டாக உடைந்துள்ளது. இந்த நிலையில், பாமக நிறுவனர் தான்தான் கட்சியின் தலைவரும்கூட என கூறியிருப்பதுடன் அன்புமணி செயல் தலைவர் என்று மட்டுமே என கூறியுள்ளார்.  இருந்தாலும் இரு தரப்புக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பாமக நிறுவனர்  ராமதாஸ் தரப்பில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு போட்டியிக அன்புமணி ராமதாஸ்,  நாளை (ஆகஸ்டு 9ந்தேதி) சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி உள்ளார். இதையடுத்து,   அன்புமணி தலைமையிலான பாமகவின் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் தரப்பில்  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் அன்புமணி நடக்கும் பாமக பொதுக்குழு கூட்டத்திற்குத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாமக தலைவராக 2022 மே மாதம் நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் மே 28ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. இதன்பின் புதிய தலைவராகக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு, கடந்த மே 30ஆம் தேதி முதல் அவர் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும், நிர்வாக பொறுப்புகளும் கட்சியின் நிறுவனத் தலைவருக்கே வழங்கி கடந்த ஜூலை 7ஆம் தேதி நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் பொதுக்குழு மற்றும் அவசர பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரமும் ராமதாஸ்க்கு மட்டுமே உள்ளது. இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் அன்புமணி செயல்பட்டு வருகிறார். கட்சியின் நிறுவனத் தலைவரின் அனுமதியில்லாமல், 100 நாள் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு எதிராக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தவுள்ளதாக அன்புமணி அறிவித்துள்ளார். உள்நோக்கத்துடன் கூடிய இந்த அறிவிப்பால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி முரளி சங்கர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார். இதனால் அன்புமணி தலைமையில் நடக்கும் பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராமதாசின் பாமக பொதுக்குழுஅறிவிப்புக்கு எதிராக போட்டி பொதுக்குழு! அன்புமணி அறிவிப்பு…