சென்னை : நடப்பு கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது  என்று பங்ளளி கல்வித்தறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். முன்பு போலவே 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் கூறினார்.

எல்லோருக்கும் எல்லாம் என்பதிலிருந்து பிறந்தது தான் மாநில கல்வி கொள்கை என்ற அமைச்சர்  இருமொழி கொள்கை தான் என்பது மாநில கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் உள்ளடக்கிய அனைவருக்குமான கல்வி என்பதே திட்டம். * வாழ்க்கை மதிப்பீடுகள், தொலைநோக்கு பார்வை உள்ளடக்கியதாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அனைவருக்குமான கல்வியை வழங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் மாநில கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்து வரும் தமிழ்நாடு அரசு புதிதாக மாநில கல்விக்கொள்கையை உருவாக்கி உள்ளது. அதன்படி சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரித்த  ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 1-ந்தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர்.

இந்த மாநில கல்விக்கொள்கையில்,  பள்ளி கல்வித்துறைக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று வெளியிட்டார்.

இந்த  மாநில கல்விக் கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி நடைமுறை தொடரும் என்றும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இதேபோல் 11-ம் வகுப்பில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அச்சத்துடன் மாணவர்கள் பயிலும் நிலை ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்ற அமைச்சர்,  உடற்கல்வி உள்ளிட்ட விஷயங்களையும் பார்த்து பார்த்து கொண்டு வந்துள்ளோம்.
மாநில கல்விக் கொள்கை காலத்திற்கு ஏற்றாற்போல் வருடந்தோறும் மாற்றப்படும் என்றவர்,  அச்சம் நிறைந்த தேர்வு என்ற நிலையை மாற்றி மாணவர்களின் திறனை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநில கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலைக்கு எந்த அறிவியல் பாடங்கள் தேவையோ அதையும் கொண்டு வந்துள்ளோம்.
மேலும்,  500 பள்ளிகளை வெற்றி பள்ளிகளாக கொண்டு வர உள்ளோம்.  என்று கூறிய அமைச்ச்ர,  AI, Robotics போன்ற பாடத்திட்டங்களையும் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது.  எத்தகைய பின்னணி கொண்ட மாணவர்களும் எதிர்காலத்தில் எந்த கல்லூரியில் எந்த நிலை அடைய வேண்டும் என நினைக்கும் வகையில் மாநில கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.  9-ம் வகுப்பு படிக்கும்போதே மாணவ-மாணவிகள் கெரியர் வழிகாட்டி பெற்று எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
மாநில கல்வித்திட்டத்தில், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வுகளை தொடர்ந்து நடத்துதல், தொடர்ச்சியான திறன் அடிப்படையிலான அகமதிப்பீடுகள் மூலம் பாடப்பொருள்மேம்பாடு, திறன் மேம்பாடு, கல்விசார் ஆயத்தநிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் மாணவர்கள் 11-ம் வகுப்பில் பயிலும் ஆண்டினை அவர்களை ஆயத்தப்படுத்தும் மற்றும் மாற்றத்துக்கு உள்ளாக்கும் ஆண்டாக கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த அணுகுமுறை தேர்வு சார்ந்த மன இறுக்கத்தை குறைக்க உதவுவதோடு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மாணவர்கள் சிறப்பாக தயாராவதை உறுதி செய்து, அவர்கள் பாடக்கருத்துக்களை ஆழ்ந்து புரிந்து கொள்ள ஊக்கப்படுத்தும். மேலும் இது மேல்நிலை வகுப்புகளில், சமநிலையான மாணவர்நேய மதிப்பீடு அமைப்பினையும் மேம்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.