2025 மார்ச்சில் கொலம்பியாவின் புகா நகருக்கு அருகில் மோதிய ஒரு மர்ம உலோகக் கோளம் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

“புகா கோளம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கோளம் யுஎஃப்ஒ ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புகாவில் இந்த கோளத்தை கைப்பற்றுவதற்கு சில வாரங்களுக்கு முன் வானத்தில் ஒழுங்கற்ற முறையில் மிதக்கும் கோளத்தை பார்த்ததாகவும், பின்னர் ஒரு காட்டுக்கு அருகில் மோதியதாகவும் சாட்சிகள் தெரிவித்தனர்.

இந்த மர்ம உலோக கோளத்தை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர் ஜோஸ் லூயிஸ் வெலாஸ்குவேஸ்,

எண்டோதெர்மிக் (குளிரூட்டும்) உமிழ்வு மற்றும் 8.1 கிலோ வரை வெளிப்படையான நிறை மாற்றங்கள் போன்ற சாத்தியமற்ற பண்புகளை வெளிப்படுத்துவதாக விவரிக்கப்பட்டுள்ள இந்த கோளம் நிலையான இயற்பியலுடன் ஒத்துப்போகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

10–15 செ.மீ விட்டம் கொண்ட கிரிக்கெட் பந்து போன்ற இந்த கோளம் சுமார் 4.5 பவுண்ட் எடை கொண்டது.

எந்தவிதமான வெல்டிங், அதாவது பற்றவைப்பு அல்லது பிணைப்புகள் இல்லாமல் இயற்கைக்கு மாறான குளிர்ச்சியுடன் உள்ள இந்த அதிசய கோளம், அசாதாரண இயற்பியல் மற்றும் ஊடாடும் பண்புகளைக் கொண்டுள்ளது.

மூன்று செறிவான உலோக அடுக்குகளையும் அதன் மையத்திற்குள் துல்லியமாக அமைக்கப்பட்ட ஒன்பது முதல் பதினெட்டு சிறிய “மைக்ரோஸ்பியர்ஸ்” வலையமைப்பையும் கொண்டுள்ளதாக எக்ஸ்-ரே மற்றும் இமேஜிங் ஸ்கேன்கள் வெளிப்படுத்தியுள்ளன.

பழங்கால வடிவமைப்பு அல்லது உருவமைப்பை கொண்ட மர்ம சின்னங்கள் அதன் தடையற்ற வெளிப்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு வெளிப்புற தூண்டுதல்களுக்கு பதிலளிப்பதாகக் கூறப்படும் இந்த கோளம் குறிப்பிட்ட ஒலி அதிர்வெண்களுக்கு, குறிப்பாக பண்டைய சமஸ்கிருத மந்திரங்களுக்கு மின்காந்த அலைகளை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது வேற்று கிரக வாசியா என்பதைத் தீர்மானிக்க மேலும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக ஜோஸ் லூயிஸ் தெரிவித்துள்ளார்.