டெல்லி: பீகார் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, இதுவரை எந்த அரசியல் கட்சியாலும் ஒரு கோரிக்கை அல்லது ஆட்சேபனை கூட தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டப்பேரவைக்கு  தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த ஜூன் 24-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், ரோஹிங்கியா, வங்கதேசம் உள்பட பல நாடுகளைச் சேர்ந்த அகதிகள், போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளதும், அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இறந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது உள்பட பல லட்சம் போலி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என தெரிய வந்துள்ளதால்,  வாக்காளர் பட்டியல் தேர்தல் தீவிர திருத்தம் மேற்கொண்டது. இதில் வாக்காளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில், முறையான ஆவங்கள் இல்லாத போலி வாக்காளர்கள என சுமார் 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியது. மேலும், ஆவணங்கள் இருப்பவர்கள் அதை காண்பித்து தங்களது பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என ஒரு மாதம் அவகாசமும் வழங்கி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின்  இந்த உத்தரவை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  ஆனால், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டதுடன், சில அறிவுறுத்தல்களை வழங்கியது.

இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முடிந்து, வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து  ஏடிஆர்​ சார்​பில், நீக்கப்பட்ட வாக்காளர்கள் விவரங்களை வெளியிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்​த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற  நீதிப​தி​கள்​ சூர்​யகாந்த்​, உஜ்ஜல்​ புயான்​ மற்​றும்​ என்​.கோடீஸ்​வர்​ சிங்​  அமர்​வு , மனு​தா​ரர்​ கோரு​வது போல நீக்கப்பட்ட முழு விவரத்​தை​யும்​ வரும்​ 9-ம்​ தேதிக்​குள்​ தேர்​தல்​ ஆணை​யம்​ வெளி​யிட வேண்​டும்​ என நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டனர்​. மேலும்​ இது தொடர்​பான அனைத்​து மனுக்​கள்​ மீதும்​ வரும்​ 12-ம்​ தேதி வி​சா​ரணை நடை​பெறும்​ என்​றும்​ நீதிப​தி​கள்​ அறி​வித்​தனர்​.

இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சிறப்பு சீர்திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும்,  ஒரு கோரிக்கை அல்லது ஆட்சேபனை கூட தேர்தல் ஆணையத்திடம்  இது தொடர்பாக சமர்ப்பிக்க வில்லை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக தகுதியான வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கும் தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்கு வதற்கும் எந்த கோரிக்கையும் ஆட்சேபனையும் தாக்கல் செய்யவில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

சிறப்பு தீவிர திருத்த SIR 2025 இன் கீழ் கணக்கெடுப்பு கட்டம் முடிந்ததைத் தொடர்ந்து, பீகாருக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஆகஸ்டு 1ந்தேதி  பிற்பகல் வெளியிட்டது. பொதுமக்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க ஒரு மாத கால அவகாசம் உள்ளது, மேலும் ஒரு குறிப்பிட்ட காரணமின்றி வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தப் பெயரும் நீக்கப்படாது என்று உறுதியளித்தது. 243 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 90 ஆயிரத்து 712 வாக்குச் சாவடிகளை உள்ளடக்கிய வரைவுப் பட்டியல், மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டத் தேர்தல் அதிகாரிகளால் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

பீகாரில் 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி