சென்னை: கிண்டி உயர்சிறப்பு மருத்துவமனை உள்பட தமிழகத்திலுள்ள 14 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கூடுதலாக 460 இடங்கள் கிடைத்துள்ளது.

மருத்துவ உயர்நிலை படிப்புகளில் சேருவதற்கான பிஜி நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று (ஆகஸ்டு 3ந்தேதி) நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் 14 அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்கி அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க தேசிய மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், இதன்‘மூலம் மேலும் 460 முதுகலை (பிஜி) மருத்துவ இடங்களைச் சேர்ந்துள்ளது.. தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் உள்ள இடங்கள் அனைத்தும் முழுமையாக நிரப்பப்படும். அதில் ஒரு இடம் கூட வீணாகும் நிலை ஏற்படாது என்றார். இன்னும் 10 நாள்களுக்குள் அதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டு அந்த இடங்களுக்கும் சோ்க்கை நடத்தப்படும் என்றாா் .
தமிழ்நாடு 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த விரிவாக்கம் மாநிலத்தின் மருத்துவக் கல்வி மற்றும் பொது சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். அமைச்சர் எம். சுப்பிரமணியன் , மாநில அரசு ஏற்கனவே அத்தியாவசியச் சான்றிதழை வழங்கியுள்ளது மற்றும் புதிய படிப்புகளுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் (NMC) ஒப்புதலைப் பெறுகிறது. இந்த விரிவாக்கம் மாநில ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ராமநாதபுரம், விருதுநகா், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூா், திருவள்ளூா், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூா், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கரூா் ஆகிய 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையிலும் 500 முதுநிலை படிப்புகளுக்கான இடங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.