டெல்லி: இன்று கலை டெல்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்  டெல்லி நடந்துவருவதால் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா அங்கு தங்கியிருந்து கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். வழக்கறிஞர் சுதா  கடந்த 2024-ம் ஆண்டு முதல் மக்களவையில் உறுப்பினராக உள்ளார். தற்போது  டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் வழக்கம்போல  இன்று காலை அவர் திமுக எம்.பி. சல்மாவுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். இரண்டுபேரும் செக் தூதரகம் அருகே சென்றுகொண்டிருந்த போது, அந்த வழியாக  இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சுதா எம்.பி. அணிந்திருந்த 4 சவரன் செயினை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா எம்.பி. டெல்லி காவல்துறையினர் புகார் அளித்துள்ளார்.

இந்த பகுதி வெளிநாட்டு தூதரகங்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு நிறைந்தபகுதியாக உள்ளது. இந்தநிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் நகைபறிக்கபட்டுள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி  சாணக்கியபுரி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.