சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.  அதன் ஒரு பகுதியாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்னும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.

தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்பரமாக ஈடுபாடுள்ளன. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓரணியில் தமிழ் நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறார். அதற்கு போடடியாக எதிரக்கட்சி தலைவரான  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதுமட்டுமின்றி உடைந்து சிதறியுள்ள பாமகவில், நான் பாமக தலைவர் என கூறிக்கொண்டிருக்கும்  அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதுபோல தமிழ்நாடு அரசியலில் இருந்து அனாதையாகப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சும், மக்கள் சந்திபபு நடத்தப்போவதாக அறிவித்து உள்ளது.  அந்த வரிசையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்படிருந்தது.

அதன்படி  நேற்று (ஆகஸ்டு 3ந்தேதி)  மாலை ஆரம்பாக்கத்தில் விநாயகர் கோவிலில் பூஜை செய்து ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ பயணத்தை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது விஜய பிரபாகரன், எல் கே சுதிஸ், பார்த்தசாரதி உள்ளிட்ட தேமுதிக முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இன்று சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக பூத் முகவர்களை சந்திக்கிறார்.

பிரேமலதாவின் முதல்கட்ட சுற்றுப்பயணமானது,  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.  இவரது முதல்கடட பணம்,  ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில்  நிறைவடைகிறது.

இன்று  ஆகஸ்ட் 4ல் ஆவடி, ஆகஸ்ட் 5ல் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை, ஆகஸ்ட் 6ல் வேலூர், ஆகஸ்ட் 7ல் திருப்பத்தூர், ஆகஸ்ட் 8ல் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 9ல் தருமபுரி, ஆகஸ்ட் 11ல் சேலம், ஆகஸ்ட் 13ல் கள்ளக்குறிச்சி, ஆகஸ்ட் 14ல் நாமக்கல், ஆகஸ்ட் 16ல் கரூர், ஆகஸ்ட் 17ல் பெரம்பலூர், ஆகஸ்ட் 18ல் அரியலூர், ஆகஸ்ட் 19ல் மயிலாடுதுறை, ஆகஸ்ட் 20ல் கடலூர் மற்றும் ஆகஸ்ட் 22ல் விழுப்புரம் பகுதிகளில் பிரசார பயணத்தை மேற்கொள்கிறார்.

ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.