சிங்கப்பூரில் கடந்த ஜூலை 26 அன்று தஞ்சோங் கட்டோங் சாலை மற்றும் மவுண்ட்பேட்டன் சாலை சந்திப்பில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அவ்வழியாக சென்ற கார் அந்த பள்ளத்தில் தலைகுப்புற விழுந்தது.
அங்கு வேலை செய்துகொண்டிருந்த கட்டுமானத் தள ஃபோர்மேன் பிச்சை உடையப்பன் சுப்பையா உள்ளிட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் காரில் இருந்தவரை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.

இதையடுத்து சற்றும் தாமதிக்காமல் சுப்பையா தன்னிடம் இருந்த நைலான் கயிறை எடுத்து குழிக்குள் இருந்த காரை நோக்கி அந்த காருக்குள் இருந்த பெண் கயிறை இருகப்பற்றிய நிலையில் சக தொழிலாளர்கள் உதவியுடன் அவரை குழிக்குள் இருந்து உயிருடன் மேலே தூக்கினர்.
பின்னர், அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அவர்கள் கிரேன் உதவியுடன் காரை குழிக்குள் இருந்து எடுத்தனர்.
இந்த சம்பவம் சிங்கப்பூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சுப்பையா மற்றும் அவருடன் அங்கு பணி செய்த ஏழு புலம் பெயர் தொழிலாளர்களை சிங்கப்பூர் அதிபர் தர்மன் நேற்று தனது அதிகாரபூர்வ இல்லமான இஸ்தானாவுக்கு நேரில் அழைத்து பாராட்டியதோடு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

இதேபோல், மற்றொரு சம்பவத்தில் குழதையின் உயிரை காப்பாற்றிய தொழிலாளர்களையும் அழைத்துப் பாராட்டினார்.
இந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் புலம் பெயர் தொழிலாளர் நல அமைப்பு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி பாராட்டு விழா நடத்துவதுடன் இவர்களுக்கு பரிசுப் பணம் வழங்கி கௌரவிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.