சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் (ஜுலை) பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் 1 கோடிக்கும் அதிகமாக பயணிகள் பயணம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

ஒரே மாதத்தில் 1 கோடி பயணிகளை கடந்த சென்னை மெட்ரோ 2025 ஜூலை மாதத்தில் 1 கோடிக்கும் அதிகமாக பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். எங்களுடன் ஒன்றாக, பாதுகாப்பாக, பயணித்த அனைவருக்கும், மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்து உள்ளது.
சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்தே சென்னை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஜூலை மாதம் 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவித்தள்ளத.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1 கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர். ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 910 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர். இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.