அமராவதி: ரூ.50ஆயிரம் கோடி செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரை (Data center.) ஆந்திராவில் அமைக்க கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசுக்கும் கூகுளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் கூகுள் (Google) என்ற பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணினி, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயற்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் கூகுள் தேடுபொறி இணையதளவாசிகளின் அத்தியாவசியமாகி உள்ளது. இந்த நிறுவனம் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கிளைகளை வைத்துள்ள நிலையில், இந்தியாவில் மிகப்பெரியா டேட்டா சென்டரை ஆந்திர மாநிலத்தில் அமைக்க முன்வதுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் ஆசியாவின் மிகப்பெரிய தரவு மையம் சுமார் 6 பில்லியன் டாலர்முதலீட்டில், அதாவது சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இந்தத் திட்டம் இந்தியாவில் கூகிளின் முதல் தரவு மைய முதலீடாகும், இது விசாகப்பட்டினத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த முதலீட்டில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வசதியை இயக்குவதற்காக குறிப்பாக, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டம் ஆந்திரப் பிரதேசத்தின் தரவு மைய திறனை கணிசமாக விரிவுபடுத்தும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 6 GW தரவு மைய திறனை அடைய மாநிலம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைய உள்ள டேட்டா சென்டர், 6 ஜிகாபைட் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக ஆந்திரப்ரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகையை கூகிள் முதலீடு செய்வது இதுவே முதல் முறை. மேலும், ஆசியாவில் இவ்வளவு பெரிய தரவு மையம் இவ்வளவு அதிக செலவில் கட்டப்படுவது இதுவே முதல் முறை. இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகுள் இந்த முதலீட்டைச் செய்கிறது. நேற்று முன் தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற வணிக வட்டமேசை மாநாட்டில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், கூகிள் கிளவுட் இயக்குனர் ட்ரூ பெய்ன்ஸை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.