சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலநலம் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று இன்று தலைமைச்செயலகம் வருகை தரும் நிலையில், அவரது இல்லத்தில் இன்று காலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது சகோதரர் சுதீஷ் உடன் சென்று நலம் விசாரித்தார்,.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 21-ந் தேதி காலை நடைபயிற்சியின்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்பதால் அவரை ஆஸ்பத்திரியில் தங்கி இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். அவருக்கு ‘ஆஞ்சியோ’ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

உடல் நலன் சீரானதை தொடர்ந்து கடந்த 27-ந்தேதி அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனார்.  சுமார் 10 நாள் மருத்துவ ஓய்வுக்கு பிறகு இன்று தலைமைச் செயலகம் செல்கிறார்.  இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சரின்  ஆழ்வார்பேட்டை  இல்லத்தில்  அவரை  தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்தார். அவரது உடல்நலம் குறித்து அவர் விசாரித்தார். அவருடன் பொருளாளர் சுதீஷூம் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தார்.

முன்னதாக  முதலமைச்சர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது,   ர்முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.