சென்னை: சென்னை புறநகர் பகுதியான பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் நடைபெற்ற  ரயில் விபத்துக்கு காரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலைதான் காரணம் என  விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது..

கவரப்பேட்டையில்  சரக்கு ரயில் மீது மோதி  அந்த வழியாக வந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தடம் புரண்டது. இந்த விபத்துக்கு காரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலைதான் ம் என விசாணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2024ம் ஆண்டு  அக்.11-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் மைசூர்-தர்பங்கா பாக்மதி விரைவு ரயில், சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன, பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி தீப்பிடித்து, 20 பேர் படுகாயமடைந்தனர், உயிா்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து பேசும்பொருளாக மாறியது. விபத்தக்கு காரணம் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்தன.

மேலும்,  ரயில் விபத்து நடந்த இடத்தில் தண்டவாளம் சேதமடைந்து காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்,  ரயில் விபத்துக்குக் காரணம் சதிச்செயலாக இருக்கும் எ என தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினா். மேலும், விபத்து குறித்து கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனா்.  மேலும், இந்த விபத்துக்கு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தி பேரில்  என்ஐஏ தனியாக விசாரணை நடத்தியது. இவ்வாறு பல தரப்புகள், விசாரணை நடத்தி வந்தது.  விபத்து நடந்த பகுதியில், சுற்றுவட்டார பகுதிகளில் தீவிரமான விசாரணைகள் நடைபெற்றது.

இதைளடுத்து தற்போது விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது.   கவரைப்பேட்டை அருகே பாக்மதி விரைவு ரயில், சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பின்னணியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலையே காரணம் என்று விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தண்டவாளத்தில் உள்ள நட்டுகள் மற்றும் போல்ட்டுகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதால் ஏற்பட்ட நாசவேலையே விபத்துக்கு காரணமாக விசாரணையில் அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து விபத்து ‘நாசவேலை’ பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் கூறிய  தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி கூறியுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில்,   விபத்தின்போது, அதிக சேதங்களை ஏற்படாமல் இருக்க ரயிலை சாதுர்யமாக இயக்கி, ரயில் ஓட்டுநர் செயல் பாராட்டத்தக்கது மேலும், பாக்மதி விரைவு ரயிலின் ஓட்டுநரின் அசாதாரண மன உறுதியையும் சௌத்ரி பாராட்டினார்.  சென்னை பிரிவைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர் ஜி. சுப்ரமணி, விபத்து நிகழப்போவதை அறிந்து அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்துவதில் சிறந்த விழிப்புணர்வுடனும் உடனடித்தன்மையுடன் செயல்பட்டதன் விளைவால் ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தப்பட்டதால் மோதலின் தாக்கம் குறைத்தது. இதில் அவரது பாராட்டத்தக்க நடவடிக்கையை ரயில்வே அங்கீகரிக்க வேண்டும் என்றும்,  இவர்கள் இருவருக்கும் விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாகவும்,  அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுக்கு பரிந்துரை பாக்மதி விரைவு ரயிலின் ஓட்டுநர் ஜி. சுப்ரமணிக்கு அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும்,  நாசவேலைக்கு ஆளாகக்கூடிய பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு, அச்சுறுத்தலின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு ரோந்துப் பணியை உறுதி செய்ய வேண்டும். ரயில்வேயின் உளவுத்துறை பிரிவை உருவாக்க வேண்டும். ரயில் பாதை பொறுத்தல் (தண்டவாளம்) மற்றும் இணைப்புகளுக்கு இடையேயான திருட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொள்ள வேண்டும். மண்டல ரயில்வே முழுவதும் உள்ள எஸ்ஐபி பிரிவுகள், ரயில்வே ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய பணியாளர்கள் குறித்த உளவுத்துறை சேகரிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, ரயில்வே பாதுகாப்புப் படையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு, நாசவேலைகளைத் தடுக்க பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வே கூடுதல் பிரிவு மேலாளர்கள் தலைமையில் நாசவேலைக்கு ஆளாகக்கூடிய பகுதிகளில் தண்டவாளங்களில் ரோந்துப் பணி தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் நிலைக்குழுவின் வழக்கமான ஆலோசனை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து ரயில்வே மண்டலங்களும் நாசவேலைக்கு ஆளாகக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், ஜிஆர்பி, உள்ளூர் காவல்துறை மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு, உளவுத்துறை சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்து ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், சந்தேகத்துக்குரிய பிரிவுகளில் சிறப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் அச்சுறுத்தல் நிலைகளின் அடிப்படையில் ரோந்துப் பணியை உறுதி செய்ய அனைத்து பிரிவுகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், விபத்து குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.