மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் கடந்த 20 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி வயிற்றில் இருந்து அரை கிலோ அளவுக்கு தலைமுடி அகற்றப்பட்டது.

செரிமான கோளாறு காரணமாக மருத்துமனைக்கு அழைத்து வரப்பட்ட அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவரிடம் அந்த சிறுமி சரியாக சாப்பிடுவதில்லை என்றும் அடிக்கடி வாந்தி எடுப்பதாகவும் கடந்த 5 – 6 மாதங்களில் வெகுவாக உடல் எடை குறைந்திருப்பதாகவும் கூறப்பட்டது.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது குடலில் ஏதோ இருப்பதை உறுதி செய்தனர்.

மேலும் அந்த சிறுமியிடம் விசாரித்ததில் அவருக்கு தலை முடியை சாப்பிடும் பழக்கம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் தீர்மானித்த நிலையில் அவரது வயிற்றில் இருந்து பந்தாக சுருட்டியிருந்த சுமார் 500 கிராம் தலைமுடி அகற்றப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின் அந்த சிறுமி நலமுடன் இருப்பதாகவும் தற்போது நன்றாக சாப்பிடுவதாகவும் தெரிவித்த மருத்துவர்கள் இன்னும் ஓரிரு தினத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறியுள்ளனர்.