ஜப்பானில் 2 மீட்டர் உயர் சுனாமி அலைகள் தாக்கியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஜப்பானின் ஹொக்கைடு மற்றும் ஹோன்ஷூ தீவுகளில் 3 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்றும் ஷிகோகு, க்யுஷு மற்றும் ஒகினாவா ஆகிய தீவுகளில் ஒரு மீட்டர் உயர சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்றும் அந்நாட்டு சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்தது.

ஹொக்கைடு மற்றும் ஹோன்ஷூ ஆகிய தீவுகளில் இந்திய நேரப்படி இன்று காலை 7:30 மணிக்கு 60 செ.மீ. உயர சுனாமி அலைகள் தாக்கியதாகவும் இதன் தொடர்ச்சியாக 9:30 மணி வரை சுனாமி அலைகள் தாக்கியதாகவும் சில நேரங்களில் உயரமான அலைகள் எழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சுனாமி அலைகள் தொடர்ந்து தாக்க வாய்ப்பு உள்ளதை அடுத்து இன்று நாள் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் சுனாமி எச்சரிக்கை விளக்கிக்கொள்ளப்படும் வரை அங்கேயே இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.