டிஜிட்டல் கட்டண முறையான UPI-யின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பல மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் சிறிய தினசரி கொடுப்பனவுகளைப் பாதிக்காது என்று கூறிய நிறுவனம், சில வரம்புகளையும் கட்டண நேர மாற்றங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய விதியின்படி, பயனர்கள் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே UPI செயலி மூலம் தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க முடியும்.
ஒரு மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட தங்கள் வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை பயனர்கள் ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே அணுக முடியும்.
Netflix, Spotify மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற பல வகையான கட்டணங்களை தானியங்கி முறையில் மாத இறுதியில் அல்லது காலாவதியாகும் போது கணக்கிலிருந்து பணம் நேரடியாக செலுத்தும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்படும்.
இந்த செயல்முறை ஆகஸ்ட் 1 முதல் குறைந்த கட்டண போக்குவரத்து நேரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும். அதாவது காலை 10 மணிக்குள், பிற்பகல் 1-5 மணி வரை மற்றும் இரவு 9.30 மணிக்குப் பிறகு பணம் செலுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.