ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாரா ஸ்ரீநகர் மாவட்டத்தின் லிட்வாஸ் புல்வெளிகளில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

தாராவின் மேல் பகுதியான லிட்வாஸில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் கூட்டுக் குழு தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியது.
இந்த நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் மோதல் எழுந்ததாக ராணுவத்தின் சினார் கார்ப்ஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
“லிட்வாஸ் பகுதியில் நடந்த தீவிர துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது” என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel