நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை வழங்குநரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), நடப்பு நிதியாண்டில் 12,000 -க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்ததை அடுத்து, அதன் பங்குகள் சுமார் 2 சதவீதம் சரிந்துள்ளன.
பிஎஸ்இயில் இந்தப் பங்கு 1.69% சரிந்து ரூ.3,081.20 ஆக இருந்தது. NSE-யில், இந்தப் பங்கு 1.7% சரிந்து ₹3,081.60 ஆக இருந்தது.

இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, நிறுவனத்தில் உலகளவில் 6,13,069 ஊழியர்கள் உள்ளனர். இதில், 2 சதவீதம், அதாவது தோராயமாக 12,261 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இது மூத்த மற்றும் நடுத்தர நிலை பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டிசிஎஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
ஜூன் காலாண்டில் நிறுவனம் 5,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியது.
இந்த நடவடிக்கை புதிய தொழில்நுட்பத்தில் முதலீடுகள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் மற்றும் சந்தை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும். நிறுவனம் புதிய சந்தைகளில் நுழைய திட்டமிட்டுள்ளது. மேலும், தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக வேலைகளை குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திறன் இடைவெளியே காரணம் : TCS CEO தகவல்