பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டிற்கு நேற்று 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சென்றதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமீர் கான் நடிப்பில் வெளியான ‘சிதாரே ஜமீன் பர்’ நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

அவரது வீட்டில் இருந்து வரிசையாக வாகனங்களில் 25 ஐ.பி.எஸ். அதிகாரிகள் வெளியேறும் வீடியோ காட்சி ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியானது.
இதையடுத்து அமீர் கானை காவல்துறையினர் ஏன் சந்தித்தனர் என்ற கேள்வி சமூக வலைதளத்தில் எழுப்பப்பட்டது.
இருந்தபோதும் இந்த செய்தியை அமீர்கான் தரப்பு இதுவரை மறுக்கவுமில்லை விளக்கமளிக்கவும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 14–24 வரை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற இருக்கும் இந்திய திரைப்பட விழா (IFFM) 2025 இல் ஆமிர் கான் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இருக்கும் நிலையில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.