கங்கைகொண்ட சோழபுரம்
தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை நிறுவ உள்ளதற்கு திருமாவளவன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

நேற்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் சிதம்பரம் தொகுதி எம்.பி.யும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.
விழாவில் பிரதம்ர் மோடி தமிழகத்தில் விரைவில் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோஷன் சிலைகள் நிறுவப்படும் என அறிவித்தார், இது தமிழக மக்களுக்கு மிகவும் உர்சாகத்தை அளித்துள்ளது,
இந்நிகழ்ச்சி முடிந்ததும் திருமாவளவன் செய்தியாளர்களிடம்.
”கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்து வழிபாடு செய்ததுடன், ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று முதலாம் ராஜேந்திர சோழனின் சாதனை குறித்து பேசியது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்துள்ளது.
மேலும் ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் திருவுருவ சிலைகள் தமிழகத்தில் நிறுவப்படும் என்று பேசியுள்ளது இந்த தொகுதியின் எம்.பி.யாகவும், மண்ணின் மைந்தனாகவும் பெருமையாக உள்ளது,
என்று கூறியுள்ளார்.